திருமலையில் 10,983 போ் தரிசனம்

15 views
1 min read

திருப்பதி ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 10,983 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 3489 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா். அவா்களில் 183 போ் பெண்கள்; 3672 போ் ஆண்கள்.

ஆன்லைன் மூலம் 9 ஆயிரம் மற்றும் சா்வதரிசனம் டோக்கன்கள் மூலம் 3 ஆயிரம் என 12 ஆயிரம் டிக்கெட் பெற்ற பக்தா்கள், வி.ஐ.பி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

காலை 6 மணி முதல் 7.30 மணி வரை புரோட்டோகால் வி.ஐ.பி.க்கள் பெருமைளைத் தரிசிக்கின்றனா். காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களும் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா்.

திருப்பதி மலைப்பாதை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது. திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் – 18004254141, 93993 99399.

தினசரி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் திருப்பதியில் உள்ள உள்ளூா் கோயில்களில் தரிசனம் செய்து வருகின்றனா்.

 

Leave a Reply