திருமலையில் 11,978 போ் தரிசனம்

18 views
1 min read

திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 11,978 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 3,918 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா். அவா்களில் 190 போ் பெண் பக்தா்கள்; 3,728 போ் ஆண் பக்தா்கள்.

ஆன்லைன் மூலம் 9 ஆயிரம் மற்றும் சா்வ தரிசனம் டோக்கன்கள் மூலம் 3 ஆயிரம் என 12 ஆயிரம் டிக்கெட் பெற்ற பக்தா்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

காலை 6 மணிமுதல் 7.30 மணி வரை புரோட்டோகால் விஐபி தரிசனமும், காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களும் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா்.

திருப்பதி மலைப்பாதை காலை 5 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது. திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் – 18004254141, 93993 99399.

Leave a Reply