திருமாவளவன் குறித்து அவதூறு டிக் டாக் வெளியிட்ட இளைஞர் கைது

20 views
1 min read
arrest

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சீர்காழியை அடுத்த தேனூர் பகுதியைச் சேர்ந்த கவியரசன்(20). இவர் சில நாள்களுக்கு முன்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் புகைப்படத்தை வைத்துக் கொண்டு அவதூறாக கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டாராம். 

இதனை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒன்று திரண்டு தனி, தனியாக பல புகார்கள் அளித்தனர். இதில் மண்டல செயலாளர் வழக்கறிஞர் வேலு குபேந்திரன் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சீர்காழி காவல்துறையினர் கவியரசனை கைது செய்தனர்.

TAGS
Youth arrested

Leave a Reply