திருவள்ளூரில் 5 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு: இதுவரை 100 பேர் பலி

16 views
1 min read
கரோனா

கரோனா பரிசோதனை

 

சென்னையின் அண்டை மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாக்கிழமை காலை நிலவரப்படி மேலும் 218 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகளவில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை ஒட்டியுள்ள மண்டலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி அதிகபட்சமாக ஆவடியில், பூவிருந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் தொற்று அதிகமாகப் பதிவாகியுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 218 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,201 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 6 பேர் பலியாகியுள்ள நிலையில், இதுவரை இந்த நோய்த் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. 

TAGS
coronavirus

Leave a Reply