திருவாடானை அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்: கருணாஸ் எம்எல்ஏ வழங்கினார்

18 views
1 min read
WhatsApp_Image_2020-07-08_at_5

திருவாடானை அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்: கருணாஸ் எம்எல்ஏ வழங்கினார்

திருவாடானை: திருவாடானை அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை கருணாஸ் எம்எல்ஏ வழங்கினார்.

திருவாடானையில் தாலுகா தலைமை அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை சம்பந்தமான படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவ உபகரணங்களும் மல்டி கேர் மானிட்டர். எக்ஸ்ரே, இசிஜி, ஐசியு படுக்கை மற்றும் வெளி காற்றில் இருந்து ஆக்சிஜனை பிரித்தெடுத்து நோயாளிக்கு ஆக்கிஜனை வழங்கும்  இயந்திரம், ஆக்சிஜன் கண்டோலன் டேட்டா மிசின், சாதரண கட்டில் மற்றும் மருத்துவ துறைக்கு தேவையான பொருட்கள் என ரூபாய் 25 லட்சத்திற்கான பொருட்கள் வாங்கப்பட்டு இன்று மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

முன்னதாக, அதற்கான தொகையை தனது தொகுதி சட்டமன்ற நிதியிலிருந்து ஒதுக்கீடு  செய்த எம்எல்ஏ கருணாஸ், அந்த பொருட்களை புதன்கிழமை திருவாடானை  மருத்துவமனைக்கு தலைமை மருத்துவர் வெங்கடேஷிடம், தாசில்தார் மாதவன் முன்னிலையில் வழங்கினார்.  
தற்போது பேராபத்தை ஏற்படுத்தும் கரோனோ தொற்று சிகிச்சை அளிக்க தனியாக வார்டு அமைக்கப்பட்டுள்ளததை கருணாஸ் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம்  கூறுகையில் தமிழக முதல்வர்  உத்தரவின் பேரில் சுகாதார அமைச்சர் ஒப்புதலின்படி அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்குவதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றும், அவசர காலத்தில் மக்களின் உயிரை காக்க பயன்படும் என்று தெரிவித்தார். 
மேலும் இந்த மருத்துவமனை மருத்துவர் பல்வேறு கோரிக்கைகளை கருணாஸிடம் கூறினர். அதையும் தமிழக முதல்வர், சுகாதார அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் சரி செய்யப்படும். கிராம காவலர்கள் நியமணத்தில் எவ்வித ஊழலும் நடந்து விடாமல் இருக்கவும், அரசிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக நடந்து விடாமல் இருக்க மாவட்ட நிர்வாகத்திடம் எடுத்து கூறுவதாக கருணாஸ் தெரிவித்தார். இதில் ஒன்றிய குழு உறுப்பினர்  சாந்தி செங்கைராஜன், ஊராட்சி தலைவர் இலக்கியா ராமு, துணைத்தலைவர் மகாலிங்கம் மற்றும் முக்குலத்தோர் புலிப்படை ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ராஜா மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
 

TAGS
tamilnadu news

Leave a Reply