திருவாரூர்: தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நல வாரியம் அமைக்கக்கோரி பட்டினிப் போராட்டம்

17 views
1 min read
tiruvarur

 

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நலவாரியம் அமைக்கக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் சார்பில் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.

தனியார் ஆசிரியர்களுக்கான நலவாரியம் அமைக்க வேண்டும் நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக மாற்ற வேண்டும், நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக மாற்ற வேண்டும் தனியார் பள்ளிகளுக்கு எந்தவித நிபந்தனையும் நிர்ப்பந்தமும் இல்லாமல் மூன்று ஆண்டு தொடர் அங்கீகாரம் உடனே வழங்க வேண்டும் கரோனா காலத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான வாழ்வு ஊதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

2018-19 ஆண்டுக்கான ஆர் டி இ கல்வி கட்டண பாக்கி 40 சதவிகிதம் மற்றும் 2019-20ஆம் ஆண்டுக்கான கல்வி கட்டண பாக்கி 100% உடனே வழங்க வேண்டும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும். 

தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள பட்டினிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் 35 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
 

TAGS
strike

Leave a Reply