திருவொற்றியூரில் கரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மையம் திறப்பு

13 views
1 min read
திருவொற்றியூர் மண்டலத்தில் பொதுமக்களின் தகவல்களை சேகரிப்பதற்காக புதிய கட்டுப்பாட்டு மையத்தை அமைச்சர் ஆர் பி உதயகுமார் திறந்துவைத்தார்.

திருவொற்றியூர் மண்டலத்தில் பொதுமக்களின் தகவல்களை சேகரிப்பதற்காக புதிய கட்டுப்பாட்டு மையத்தை அமைச்சர் ஆர் பி உதயகுமார் திறந்துவைத்தார்.

 

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் கரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மையத்தை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திறந்துவைத்தார்.

திருவொற்றியூர் மண்டலத்தில் பொதுமக்கள் மற்றும் அவர்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காக புதிதாக ஆசிரியர்களைக் கொண்டு கட்டுப்பாடு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு மையத்தை அமைச்சர் ஆர் பி உதயகுமார், சிறப்பு அதிகாரி ஜாண் டாம் வர்கீஸ் முன்னிலையில் திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவொற்றியூரில் 3 லட்சம் மக்கள் உள்ளனர். 90 ஆயிரம் வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் குறித்த முழு தகவல்களும் இந்த கட்டுப்பாட்டு மையத்தில் சேகரிக்கப்பட்டுள்ளது. 

வீடுகளில் எத்தனை நபர்கள் உள்ளனர், இவர்களுக்கு என்ன நோய் உள்ளது என்பது குறித்த தகவல்கள் இங்கு இருப்பதால் நோய் தொற்று ஏற்பட்டால் எளிதில் இவர்களை கண்டறியும் பணி நடைபெறும். நேற்று 4545 பேர் நோயிலிருந்து விடுபட்டு வீடு திரும்பினர். நோய்தொற்று 3616 தான் இந்த செய்தி நமக்கு ஒரு நம்பிக்கை தரும் செய்தியாகும்.

தமிழக முதல்வரின் அறிவாற்றலாலும் தீவிரமான முயற்சியாலும் இந்த வெற்றி நமக்கு கிடைத்துள்ளது. பாதுகாப்பு அரண் போல் தமிழகத்தை அவர் காத்து வருகிறார். திருவொற்றியூர் மண்டலத்தில் இணை நோய்களால் ஒரு சவாலான நிலை ஏற்பட்டு வருகிறது. பலருக்கு இணை நோய்கள் உள்ளது பொதுமக்கள் 100 சதவீதம் நமக்கு ஒத்துழைப்பு தந்தால் இந்த தொற்றியில் இருந்து விடுபடலாம் மத்திய குழு ஏற்கனவே இரு முறை வந்து தமிழக அரசின் பணிகளை பாராட்டி சென்றுள்ளனர். தற்போதும் வரவுள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக தமிழக அரசு சிறப்பாக பணிகள் செய்து வருகிறது.

மின்கட்டண அளவீடு குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருவது அரசுக்கு தெரியும். மின்சாரத்துறை அமைச்சர் இது குறித்து தீவிரமாக கண்காணித்து ஆய்வு செய்து வருகிறார் எனக் கூறினார். அவருடன் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்எல்ஏ, மண்டல அலுவலர் பால் தங்க துரை, செயற்பொறியாளர் வேலுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவொற்றியூர் மண்டலத்தில் பொதுமக்களின் தகவல்களை சேகரிப்பதற்காக புதிய கட்டுப்பாட்டு மையத்தை அமைச்சர் ஆர் பி உதயகுமார் திறந்துவைத்தார். அவருடன் சிறப்பு அதிகாரி ஜான் வர்கீஸ் மாவட்ட செயலாளர் வி அலெக்சாண்டர் எம்எல்ஏ உட்பட பலர் உள்ளனர்.

Leave a Reply