திரு​வ​னந்​த​பு​ரத்​தில் ஒரு வார முழு பொது முடக்​கம் அமல்

14 views
1 min read
lockdown

​தி​ரு​வ​னந்​த​பு​ரம்: கரோனா பர​வல் அதி​க​ரித்து வரும் நிலை​யில், கேரள தலை​ந​கர் திரு​வ​னந்​த​பு​ரத்​தில் ஒரு வார முழு பொது முடக்​கம் திங்​கள்​கி​ழமை அம​லுக்கு வந்​தது. இதை​யொட்டி, மத்​திய, மாநில அரசு அலு​வ​ல​கங்​கள் செயல்​ப​ட​வில்லை. கடை​கள், வர்த்​தக நிறு​வ​னங்​கள் அடைக்​கப்​பட்​டி​ருந்​தன. அர​சுப் பேருந்து உள்​ளிட்ட பொதுப் போக்​கு​வ​ரத்து இயங்​க​வில்லை.

கேர​ளத்​தில் கரோனா பாதிப்பு குறை​வாக இருந்த நிலை​யில் கடந்த சில நாள்​க​ளாக வேக​மாக அதி​க​ரித்து 5 ஆயி​ரத்​தைக் கடந்​துள்​ளது.  கடந்த ஞாயிற்​றுக்​கி​ழமை மட்டும் 225 பேருக்கு தொற்று ஏற்​பட்​டது. இவர்​க​ளில் 22 பேர் திரு​வ​னந்​த​பு​ரத்​தைச் சேர்ந்​த​வர்​கள். தலை​ந​க​ரில் கரோனா தொற்று அதி​க​ரித்து வரு​வ​தை​யொட்டி முழு பொது முடக்​கத்தை அமல்​ப​டுத்த மாநில அரசு முடிவு செய்​தது. அதன்​படி, முழு பொது முடக்​கம் திங்​கள்​கி​ழமை அம​லுக்கு வந்​தது. இதை​யொட்டி, மாநில முதல்​வர் பின​ராயி விஜ​யன் திரு​வ​னந்​த​பு​ரத்​தில் உள்ள அவ​ரது அதி​கா​ர​பூர்வ இல்​லத்​தில் இருந்து அர​சுப் பணி​க​ளைக் கவ​னித்து வரு​கி​றார். தலை​மைச் செய​ல​கத்​தி​லும் முக்​கி​ய​மான துறை அலு​வ​ல​கங்​கள் மட்டும் செயல்​பட்டு வரு​வ​தாக அரசு வட்டா​ரங்​கள் தெரி​வித்​தன.

கரோனா பர​வல் அதி​க​ரித்து வரு​வ​தை​யொட்டி, “தலை​ந​கர் திரு​வ​னந்​த​பு​ரம் ஓர் எரி​ம​லை​யின் மீது அமர்ந்​துள்​ளது. அது எப்​போது வேண்​டு​மா​னா​லும் வெடிக்​க​லாம். முழு பொது முடக்​கம் முடிந்த பின்​ன​ரும் கட்டுப்​பா​டு​கள் தொட​ரும் என மாநில சுற்​று​லாத் துறை அமைச்​சர் கட​கம்​பள்ளி சுரேந்​தி​ரன் தெரி​வித்​தார்.

“மாந​க​ராட்​சி​யில் உள்ள 100 வார்​டு​கள் மற்​றும் நெடுஞ்​சா​லை​கள் சீல்​வைக்​கப்​பட்​டுள்​ளன. தேவை​யின்றி வீட்டை விட்டு வெளியே வரு​வோர் மீது வழக்​குப் பதிந்து நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும்’ என காவல் துணை ஆணை​யர் திவ்யா கோபா​லன் தெரி​வித்​தார்.

கரோனா சமூ​கப் பர​வ​லைத் தடுக்​கும் வகை​யில் ஏற்​கெ​னவே வடக்கு காசர்​கோடு, கண்​ணூர் மாவட்​டங்​கள் மற்​றும் மலப்​பு​ரம் மாவட்​டத்​தில் சில பகு​தி​க​ளில் முழு பொது முடக்​கம் வெற்​றி​க​ர​மாக அமல்​ப​டுத்​தப்​பட்​டது. அதைப் பின்​பற்றி இப்​போது திரு​வ​னந்​த​பு​ரத்​தில் அமல்​ப​டுத்​தப்​பட்​டி​ருக்​கி​றது.

Leave a Reply