தில்லியில் அனைத்துப் பல்கலைக்கழகத் தேர்வுகளும் ரத்து

14 views
1 min read
Delhi govt cancels all state university exams

கரோனா நெருக்கடி காரணமாக தில்லியில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்களின் இறுதியாண்டுத் தேர்வுகள் உள்பட அனைத்துத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

கரோனா நெருக்கடி காரணமாக தில்லியில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்களின் இறுதியாண்டுத் தேர்வுகள் உள்பட அனைத்துத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

தில்லியில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் முந்தையத் தேர்வுகள் அல்லது உள் மதீப்பிட்டின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும் இறுதியாண்டு மாணவர்கள் மேற்கொண்டு பட்டப்படிப்பை தொடர விண்ணப்பிக்க வேண்டும் அல்லது வேலைக்கு சேர விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு பட்டங்களை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் இதே நடைமுறையைப் பின்பற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியிருப்பதாக சிசோடியா தெரிவித்தார்.

முன்னதாக, நாடு முழுவதும் பல்கலைக்கழக இறுதித் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு கடந்த திங்கள்கிழமை அறிவுறுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து கரோனா பேரிடருக்கு இடையே தேர்வுகளை நடத்துவது சரியல்ல என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியும், கல்லூரித் தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவெடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

TAGS
University Exams

Leave a Reply