தில்லியில் புதிதாக 1,781 பேருக்கு கரோனா

14 views
1 min read
1,781 COVID19 cases, 2,998 recovered, & 34 deaths reported in Delhi today.

தில்லியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1,781 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1,781 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி புதிதாக 1,781 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 34 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,10,921 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 3,334 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று 2,998 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 87,692 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 19,895 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மட்டும் 21,508 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

TAGS
coronavirus

Leave a Reply