தில்லியில் புதிதாக 2,089 பேருக்கு கரோனா தொற்று

20 views
1 min read
Coronavirus_PPE_PTI

கோப்புப் படம்

தில்லியில் புதிதாக 2,089 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,93,802 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 26,506 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 475 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், நாட்டில் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 21,604 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,95,513 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தில்லியில் புதிதாக 2,089 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இத்துடன் அங்கு ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,09,140 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு இன்று கரோனாவால் 42 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் அங்கு ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 3,300 ஆக அதிகரித்துள்ளது.

TAGS
delhi Corona

Leave a Reply