தில்லியில் புதிதாக 2,187 பேருக்கு கரோனா

22 views
1 min read

தில்லியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 2,187 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)

தில்லியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 2,187 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி அங்கு புதிதாக 2,187 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 45 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,07,051 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 3,258 ஆக உயர்ந்துள்ளது.

எனினும் இன்று மட்டும் மொத்தம் 4,027 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 82,226 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 21,567 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தில்லியில் இன்று 9,719 ஆர்டி-பிசிஆர் பரிசோதனையும், 12,570 ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 7,24,148 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

TAGS
coronavirus

Leave a Reply