தில்லியில் புதிதாக 2,442 பேருக்கு கரோனா

20 views
1 min read

​தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 2,442 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)

தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 2,442 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய இன்றைய அறிவிப்பை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 2,442 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 61 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 89,802 ஆக உயர்ந்துள்ளது. இதில் 27,007 பேர் சிகிச்சையில் உள்ளனர். 59,992 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,803 பேர் பலியாகியுள்ளனர்.

TAGS
coronavirus Delhi Corona கரோனா தில்லி கரோனா

Leave a Reply