தில்லியில் மேலும் 1,573 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி

21 views
1 min read
delhi corona update

தில்லியில் ஞாயிறன்று மேலும் 1,573 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

புது தில்லி : தில்லியில் ஞாயிறன்று மேலும் 1,573 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில அரசு ஞாயிறு இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தில்லியில் இன்று ஒரே நாளில் மேலும் 1,573 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாநிலம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 1,12,494 ஆக ஆக அதிகரித்துள்ளது.  

அதேபோல இன்று ஒரே நாளில் மேலும் 37 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து மொத்த இறப்பு எண்ணிக்கை 3,371 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply