தில்லி எய்ம்ஸ் விடுதியின் பத்தாவது மாடியில் இருந்து குதித்த இளம் மருத்துவர்!

19 views
1 min read
resident doctor jumps from 10th floor

தில்லி எய்ம்ஸில் பணிபுரிந்து வந்த இளம் மருத்துவர் ஒருவர் தங்கியிருந்த விடுதியின் பத்தாவது மாடியில் இருந்து குதித்த சம்பவம் நடந்துள்ளது.

 

புது தில்லி: தில்லி எய்ம்ஸில் பணிபுரிந்து வந்த இளம் மருத்துவர் ஒருவர் தங்கியிருந்த விடுதியின் பத்தாவது மாடியில் இருந்து குதித்த சம்பவம் நடந்துள்ளது.

இதுதொடர்பாக போலீஸ் தரப்பு வெளியிட்டுள்ள தகவலில்,’ தில்லி எய்ம்ஸ்  மருத்துவமனையில் உறைவிட மருத்துவராகப் பணிபுரிந்து வந்த 25 வயது இளம் மருத்துவர் ஒருவர் தான் தங்கியிருந்த விடுதியின் பத்தாவது மாடியில் இருந்து வெள்ளியன்று கீழே குதித்துள்ளார். அவர் தற்போது எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டு தற்போது ஆபத்தான கட்டத்தில் உள்ளார். அவர் ஏன் குதித்தார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 5-ஆம் தேதியன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 37 வயது பத்திரிக்கையாளர் ஒருவர் இதே மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்து, சிகிச்சை பலனில்லாமல் உயரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply