தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒருநாள் முழு ஊரடங்கு: வெறிச்சோடியது சாலைகள்

17 views
1 min read
tut

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.  

தமிழகம் முழுவதும் ஜூலை மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என்று அரசின் உத்தரவின் பேரில் இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ளது. 

இதனால் அனைத்து கடைகள் மற்றும் தினசரி சந்தைகள், மீன் மார்கெட், கறி கடைகள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டு சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. தூத்துக்குடி முழு ஊரடங்கு காவல் துறையினர் மக்களிடம் அனாவசியமாக வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வலியுறுத்தி வருகின்றனர். 

இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்களை மாஸ்க் ஹெல்மட் அணிந்து செல்லுங்கள் என அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர்  பழைய மாநகராட்சி முன்பு மத்திய பாகம்  காவல் ஆய்வாளர் ஜெய பிரகாஷ் தலமையில் காவல்துறையினர் வாகன சோதனை செய்தனர்.
 

TAGS
Thoothukudi

Leave a Reply