தெக்கலூர் எல்லைப் பாதுகாப்பு படை வீரருக்கு கரோனா

17 views
1 min read

 

அவிநாசி அருகே தெக்கலூரில் உள்ள எல்லைப் பாதுகாப்பு படை முகாம் வீரருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, முகாமில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவிநாசி அருகே தெக்கலூர் கிட்டாம்பாளையத்தில் எல்லைப் பாதுகாப்பு படை(149 பட்டாலியன்) முகாம் உள்ளது.  இதில் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இதில் உள்ள 33 வயதான வீரர் ஒருவருக்கு சளி மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் அவருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்காக கோவை அனுப்பி வைக்கப்பட்டார்.

இதையடுத்து இவருடன் தொடர்பில் இருந்த 21 வீரர்களுக்கு சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சளி மாதிரி பரிசோதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply