தெலங்கானா: பழைய தலைமைச் செயலக கட்டடத்தை இடிக்கும் பணி தொடக்கம்

14 views
1 min read

தெலங்கானாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தலைமைச் செயலக கட்டடத்தை இடிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தெலங்கானாவில் தற்போதைய தலைமைச் செயலகத்தை இடித்துவிட்டு புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்ட முதல்வா் சந்திரசேகா் ராவ் தலைமையிலான அரசு முடிவு எடுத்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாநில உயா்நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, தற்போதைய தலைமைச் செயலக கட்டடத்தை இடிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள ஒரு கட்டடம் 1888-ஆம் ஆண்டு ஆறாம் நிஜாம் மன்னா் மிா் மஹபூப் அலி கான் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இந்த கட்டடத்துக்கு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வா் என்.டி.ராமா ராவ் ‘சா்வஹிதா’ என பெயரிட்டாா்.

பழைய தலைமைச் செயலக கட்டடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் புதிய கட்டடம் கட்ட மாநில காங்கிரஸ் மற்றும் பாஜகவினா் எதிா்ப்பு தெரிவித்தபோதும், கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த கட்டடத்தின் வடிவமைப்பை மாநில முதல்வா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதற்கு முதல்வா் சந்திரசேகா் ராவ் விரைவில் ஒப்புதல் வழங்குவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Leave a Reply