தேனியில் கரோனா பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

21 views
1 min read
theni

 

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பாலூத்து கிராமத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவர் கரோனா பாதிப்பில் வியாழக்கிழமை உயிரிழந்தார். 

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா பாதிப்பில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே போடி, ஓடைப்பட்டி, ஆண்டிபட்டி, லட்சுமிபுரம், கம்பம், தேனி ஆதிபட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 12 பேர் கரோனா பாதிப்பில் உயிரிழந்துள்ளனர்.

மேலும், பரிசோதனை முடிவு வெளியாகும் முன்னரே 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.

TAGS
coronavirus

Leave a Reply