தேனியில் வெறிச்சோடிய சாலைகள்

19 views
1 min read
theni1

தேனி மாவட்டத்தில் முழு பொது முடக்கத்தை முன்னிட்டு வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டமின்றி ஞாயிற்றுக்கிழமை, சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

மாவட்டத்தில் ஜூலை மாதம் 2-வது முறையாக ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது முடக்கத்தை முன்னிட்டு கடைகள், வர்த்த நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்கள் இயங்கப்படவில்லை.

இதனால், வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மீது காவல் துறையினர் வழக்கு பதிந்தும், அபராதம் விதித்தும் வருகின்றனர். 

மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும்  நாளை(திங்கள்கிழமை) காலை 6 மணி வரை முழு பொது முடக்கம் அமலில் இருக்கும் என்று காவல் துறையினர் கூறினர்.
 

TAGS
theni total lockdown

Leave a Reply