தொடர்ந்து 3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

17 views
1 min read
Petrol, diesel prices remain unchanged for third consecutive day

புது தில்லி: நாட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

தில்லியில் பெட்ரோல் விலை ரூ.80.43 ஆகவும், டீசல் விலை ரூ.80.78 ஆகவும் உள்ளது.

தொடர்ந்து ஏழு நாள்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் இருந்த நிலையில், கடந்த செவ்வாயன்று டீசல் விலை மட்டும் லிட்டருக்கு 25 பைசாவை அதிகரித்தும், பெட்ரோல் விலையை மாற்றமில்லாமலும் அறிவித்திருந்தன. அதன்பிறகு தற்போது தொடர்ந்து மூன்றாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாமல் நீடிக்கிறது.

ஜூன் 24ம் தேதி முதல் நாட்டிலேயே தில்லியில் மட்டும் பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகமாக இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply