நடமாடும் கரோனா மாதிரி சேகரிப்பு வாகனம் சுகாதாரத்துறையிடம் ஒப்படைப்பு

21 views
1 min read
corona sample collection vehicle handed over

வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக நடமாடும் கரோனா மாதிரி சேகரிப்பு வாகனம் ஒப்படைப்பு

கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பாக நடமாடும் கரோனா மாதிரி சேகரிப்பு வாகனம் வெள்ளிக்கிழமை சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் உத்தரவின் பேரில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலம் சார்பில் கரோனா பரிசோதனைகாக மாதிரி சேகரிக்கும் நடமாடும் வாகனம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம் கரோனா பாதித்த பகுதிகளில் கரோனா பரிசோதனைக்காக இந்த வாகனம் அங்கேயே சென்று அங்கு மாதிரிகள் சோதனைக்காக பெறப்படும்.

இந்த நடமாடும் பரிசோதனை வாகனத்தை சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்விற்கு கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழுத் தலைவர் கே.எம்.எ.சிவகுமார் தலைமை தாங்கி பரிசோதனை வாகனத்தை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜிடம் ஒப்படைத்தார்.

நிகழ்வில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ருத்ரமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலக காசாளர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்த நடமாடும் பரிசோதனை வாகனத்திற்கான செலவுகள் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு பொது நிதியில் இருந்து வழங்கப்படும். இந்த வாகனம் மூலம் கரோனா பரிசோதனைகள் சம்பந்தப்பட்ட நபர் வசிக்கும் பகுதியிலேயே நடைபெறும் என்பதால் கரோனா தொற்று பரவல் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

TAGS
கும்மிடிப்பூண்டி

Leave a Reply