நாகை மீனவர் வலையில் சிக்கிய 12 அடி நீள மீன் 

18 views
1 min read
fish

நாகையைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் மீன்பிடி வலையில் சுமார் 12 அடி நீளமுள்ள உயரக “ஏ” மீன் பிடிபட்டது.

நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு சொந்தமான விசைப்படகில் நாகை மீனவர்கள் புதன்கிழமை இரவு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது கடலில் பலத்த மழை பெய்ய தொடங்கியதால், மீனவர்கள் அவசரகதியில் கரை திரும்ப ஆயத்தமாகியுள்ளனர். 

செல்வத்தின் விசைப்படகில் இருந்து வீசப்பட்டு இருந்த மீன்பிடி வலையை மீனவர்கள் இழுக்க முயன்றபோது மிகப்பெரிய அளவில் ஏதோ ஒன்று வலையில் சிக்கியிருப்பது தெரியவந்தது.  

மீனவர்கள் மிகுந்த சிரமத்துடன் வலையை இழுத்தபோது சுமார் 12 அடி நீளமும் 250 கிலோ எடையும் கொண்ட ஏற்றுமதி ரக “ஏ” மீன் வலையில் சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மீனை வியாழக்கிழமை கரைக்குக் கொண்டு வந்த மீனவர்கள்,  மிகுந்த மகிழ்ச்சியுடன் “ஏ” மீனை விற்பனை செய்தனர்.

TAGS
nagai tamilnadi fish 12 feet

Leave a Reply