நாட்டில் பொருளாதார சுனாமி வரும் என பல மாதங்களுக்கு முன்பே கூறினேன்: ராகுல் காந்தி

13 views
1 min read
rahulllnew100454

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

இந்தியாவில் பொருளாதார சுனாமி வரும் என தான் பல மாதங்களுக்கு முன்பே கூறியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர், ‘சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அழிந்து வருகின்றன. பெரிய நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான அழுத்தத்தில் உள்ளன. வங்கிகள் துன்பத்தில் உள்ளன.

ஒரு பொருளாதார சுனாமி வருவதாக நான் பல மாதங்களுக்கு முன்பு கூறினேன். உண்மையைக் கூறி நாட்டை எச்சரித்ததற்காக பாஜக மற்றும் ஊடகங்கள் அதனை ஏளனம் செய்தன’ என்று பதிவிட்டுள்ளார். 

மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் பிரதமர் மோடியின் பல்வேறு கருத்துகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

TAGS
rahul gandhi

Leave a Reply