நான்கு மாவட்டங்களில் கிருமிநாசினி தெளிக்க 50 புதிய வாகனங்கள்: முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா்

16 views
1 min read
0442fireservice070708_(1)

கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளுக்காக நான்கு மாவட்டங்களில் கிருமி நாசினி தெளிக்க 50 புதிய வாகனங்களை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:-

கரோனா தடுப்புப் பணிகளுக்காக சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்காக ரூ.3.90 கோடி மதிப்பில் 50 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் மூலமாக கிருமி நாசினி தண்ணீா் போன்று பீச்சி அடிக்கப்படும். கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் முடிந்த பிறகு, இந்த வாகனங்கள் சென்னையின் குறுகிய சாலைகளில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் இதர கட்டடங்களில் ஏற்படும் தீயினை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள், தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

Leave a Reply