நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சமூக இடைவெளியின்றி மக்கள் கூடிய வாரச்சந்தை

14 views
1 min read
வாரச்சந்தையில் ஏராளமான பொதுமக்கள் விழிப்புணர்வு இன்றி சமூக இடைவெளியை பின்பற்றாமல் திரண்டு நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர். 

வாரச்சந்தையில் ஏராளமான பொதுமக்கள் விழிப்புணர்வு இன்றி சமூக இடைவெளியை பின்பற்றாமல் திரண்டு நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர். 

ராசிபுரம் அருகே சமூக இடைவெளியின்றி வாரச்சந்தையில் ஏராளமான பொதுமக்கள் விழிப்புணர்வு இன்றி சமூக இடைவெளியை பின்பற்றாமல் திரண்டு நின்று பொருட்களை வாங்கிச் சென்றது அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது 85- ஆர்.குமாரபாளையம். இப்பகுதியை சுற்றி விசைத்தறியாளர்கள், விவசாயிகளும் அதிகம் உள்ளனர். 85 – ஆர். குமாரபாளையம் பகுதியில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை கூடுவது வழக்கம். 

இதனையடுத்து சுற்றுப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சந்தையில் கூடி வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வர். ஆனால் தற்போது கரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி சந்தை கூடுவதால் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

பல்வேறு இடங்களில் வாரச்சந்தை கூடுவது தடை விதிக்கப்பட்டும், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் உள்ள நிலையில் புதன்கிழமை கூடிய இப்பகுதி வாரச்சந்தையில் ஏராளமான பொதுமக்கள் விழிப்புணர்வு இன்றி சமூக இடைவெளியை பின்பற்றாமல் திரண்டு நின்று பொருட்களை வாங்கிச் சென்றது அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் மாவட்ட நிர்வாகம் வாரச்சந்தை கூடுவதில் கட்டுப்பாடுகளை கவனத்தில் கொள்ளவேண்டும். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply