நியாய விலைக்கடைகளில் தரமற்ற அரிசி: காரைக்குடி வட்டாச்சியரிடம் பாஜக மகளிரணியினர் புகார்

19 views
1 min read
தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி வட்டாச்சியரிடம் மனு ஒன்றும் அளித்த பாரதீய ஜனதா கட்சியின் மகளிரணியினர்.

தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி வட்டாச்சியரிடம் மனு ஒன்றும் அளித்த பாரதீய ஜனதா கட்சியின் மகளிரணியினர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகாவில் உள்ள நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் அரிசி  தரமற்றதாக உள்ளதால் வரும் நாள்களில் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி பாரதீய ஜனதா கட்சியின் மகளிரணியினர் வியாழக்கிழமை வட்டாச்சியரிடம் நேரில் சென்று வலியுறுத்தினர்.    

வட்டாச்சியர் பாலாஜியிடம் பாஜக மகளிரணி நிர்வாகிகள் தெரிவித்ததாவது:  கரோனா கால கட்டத்தில் வறுமையில் வாடும் ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்துப் பொதுமக்களுக்கும் ஏற்கனவே மாநில அரசு 20 கிலோ அரிசி வழங்குகிறது. இதனுடன் கூடுதலாக 5 கிலோ அரிசி மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் முதல் வழங்கி வருகிறது.  

காரைக்குடி தாலுகாவில் உள்ள பல நியாய விலைக்கடை களில் பொதுமக்களுக்கு தரமற்ற அரிசிகள் வழங்கப்படுவதாக வந்துள்ள புகாரை கலைந்து வரும் நாள்களில் தரமான அரிசி கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தெரிவித்தனர். இது தொடர்பாக மனு ஒன்றும் அளித்தனர்.   

இதில் பாஜக மகளிரணி சிவகங்கை மாவட்டத் தலைவர் கோமதி நாச்சியார், காரைக்குடி நகர மகளிரணி தலைவி நந்தினி அழகப்பன் மற்றும் மகளிரணியினர் கலந்து கொண்டனர்.   

மேலும் பாஜக மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.வி. நாராயணன், என். மீனாட்சி நாகராஜன், பாஜக மாவட்டச் செயலாளர் ஏ. நாகராஜன், பழனீஸ்வரி, சிவானந்தம், மாவட்டப் பொருளாளர் வை. சந்திரசேகரன், காரைக்குடி நகரத் தலைவர் கே. சந்திரன், ஒன்றியத் தலைவர்கள் எம். சங்கர், பிஎல். வெங்கடேசன், கே. பாலமுருகன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

Leave a Reply