நியூ யார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் அயோத்தி கோயில், ராமர் புகைப்படம் ஒளிர உள்ளது

6 views
1 min read
Lord Ram's photos, Ayodhya Temple Model To Be Displayed At New York's Times Square

நியூ யார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் அயோத்தி கோயில், ராமர் புகைப்படம் ஒளிர உள்ளது

நியூ யார்க்: அயோத்தியில் ராம ஜென்மபூமியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ள ஆகஸ்ட் 5-ம் தேதி நியூ யார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் அயோத்தியில் அமைய உள்ள கோயிலின் மாதிரியும், ராமரின் உருவப்படமும் ஒளிர உள்ளது.

அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியை கொண்டாடும் வகையில் நியூ யார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில், அயோத்தி ராமர் கோயில் மாதிரி மற்றும் ராமரின் புகைப்படங்களை ஒளிர விடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக, அமெரிக்க இந்திய பொது விவகாரக் குழுத் தலைவர் ஜெகதீஷ் சேவானி தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5ம் தேதி காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை, ஜெய் ஸ்ரீ ராம் என்ற வார்த்தை இந்தியிலும், ஆங்கிலத்திலும் ஒளிரவிடப்படுகிறது. அதே சமயம், கடவுள் ராமரின் உருவப்படம், விடியோக்கள், முப்பரிமாண உருவப்படம், கோயிலில் மாதிரி, கட்டமைப்புப் படங்களுடன், கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடியின் படங்களும் டைம்ஸ் சதுக்கத்தில் ஒளிரவிடப்பட உள்ளது.

உலகிலேயே அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த இடமாகக் கருதப்படும் டைம்ஸ் சதுக்கத்தில், அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா குறித்த புகைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
 

TAGS
ayodhya

Leave a Reply