நீடாமங்கலத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

20 views
1 min read
needamangalam

நீடாமங்கலத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

 

அரசு ஊழியர்கள் பணி ஓய்வு வயது நீட்டிப்பு சத்துணவு ஊழியர்களுக்கு பொருந்தாது என்பதைக் கண்டித்து சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்டத் தலைவர் கரிகாலன் தலைமை வகித்தார். வட்டச்செயலாளர் வீரமணி முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மகேஷ் அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் ஆறுமுகம் ஊரக வளர்ச்சித் துறை வட்டத் தலைவர் மணிகண்டன் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் முருகையன் ஆகியோர் உரையாற்றினர். 

இறுதியாக வட்ட பொருளாளர் ராஜா நன்றி கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.சத்துணவு ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
 

TAGS
demonstration

Leave a Reply