நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.329 கோடி சொத்துகளை பறிமுதல் செய்த அமலாக்கத் துறை

13 views
1 min read
nirav_modi

நீரவ் மோடிக்கு சொந்தமாக மும்பை, ராஜஸ்தான், ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் பிரிட்டனில் இருக்கும் ரூ.329 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.

தெற்கு மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள சமுத்ர மஹாலின் 4 குடியிருப்புகள், கடற்கரையோர பண்ணை வீடு, லண்டனில் ஒரு குடியிருப்பு, பிரிட்டனில் ஒரு குடியிருப்பு, வங்கி முதலீடுகள், பங்குகள் உள்ளிட்டவையும் அமலாக்கத் துறை பறிமுதல் செய்த சொத்தில் அடங்கும்.

பல்வேறு நாடுகளில் வைரம் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்து வந்த தொழிலதிபா் நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல் கடந்த ஆண்டு ஜனவரியில் லண்டனுக்குத் தப்பிச் சென்றாா்.

இதுதொடா்பாக, சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

பிரிட்டன் காவல்துறையினரால் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி, தற்போது லண்டன் வாண்ட்ஸ்வொா்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகளை அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ளது.

அவரை பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கவும், அவரது சொத்துகளை பறிமுதல் செய்யவும் அமலாக்கத் துறை மும்பயில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

TAGS
nirav modi

Leave a Reply