நீலகிரியில் காவல்துறையினருக்கு வழிகாட்டு நெறிமுறை கூட்டம்

16 views
1 min read
WhatsApp_Image_2020-07-06_at_4

நீலகிரி மாவட்டத்தில்  காவல்துறையினர்  பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து காவல்துறையினருக்கு வழிகாட்டு நெறிமுறை கூட்டம் மேற்கு மண்டல ஐஜி  பெரியய்யா  தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி  ஏடிஎஸ்பி நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றியதற்கு  அனைத்துக் கட்சி கூட்டத்தி்ல்  எதிர்ப்பு, மற்றும்  பல்வேறு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்திருப்பது குறித்து  செய்தியாளா்கள் கேட்டதற்கு  பதில் அளிக்காமல் சென்று விட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் பேசும் போது,  தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்  ஈடுபடும் தன்னாா்வலா்களை காவல்துறையினா் ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது.  அவர்கள் மீது புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

துாத்துக்குடி மாவட்டம்  ஏடி எஸ்பி நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டதால் பல்வேறு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து  மனு அளித்துள்ளனா். அது குறித்து அரசுக்கும் காவல்  உயா்அதிகாரிகளுக்கும்  தகவல் அனுப்பப்பட்டுள்ளது அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்சியில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட  காவல் துறை  அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

Leave a Reply