நெய்வேலி விபத்து குறித்து விசாரிக்க உயர்நிலைக் குழு

24 views
1 min read

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து விசாரிக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், நெய்வேலியிலுள்ள அனல் மின் நிலையத்தில் புதன்கிழமை காலை கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 17 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்த நிலையில் என்எல்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் படுகாயமடைந்த 16 பேர் முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு, மேற்கொண்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். லேசாக காயமடைந்தவருக்கு என்எல்சி மருத்துவமனையிலேயே சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விபத்து குறித்து விசாரிப்பதற்காக பி.கே. மோஹபத்ரா [ஓய்வு பெற்ற இயக்குநர் (தொழில்நுட்பப் பிரிவு), என்டிபிசி] தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக என்எல்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, என்.எல்.சி. 2-ஆவது அனல் மின் நிலையத்தின் பொது மேலாளர் கோதண்டம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்
நெய்வேலி விபத்து: 2ஆவது அனல்மின் நிலையத்தின் பொது மேலாளர் பணியிடை நீக்கம்
நெய்வேலி விபத்து குறித்து முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார் அமித் ஷா

TAGS
Neyveli NLC Boiler Accident High Level Enquiry நெய்வேலி என்எல்சி கொதிகலன் விபத்து

Leave a Reply