நெல்லை மாவட்டத்தில் 110 பேருக்கு கரோனா

18 views
1 min read
Tirunelveli_highground_hospital

கோப்புப் படம்

திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை மேலும் 110 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,409 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கரோனா தீநுண்மி தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. தமிழகத்திலும் கரோனா வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்திலும் கரோனாவின் தாக்கம் தீவிரமாக உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை மேலும் 110 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,409 ஆக உயா்ந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 735 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 9 போ் உயிரிழந்துள்ளனா். தற்போதைய நிலையில் 665 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

 

Leave a Reply