நேபாள அரசியல் பதற்றம்: ஆளும் கட்சிக் கூட்டம் மேலும் ஒரு வாரத்துக்கு ஒத்திவைப்பு

34 views
1 min read
nepals_1007chn_1

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதி.

நேபாளத்தில் ஆளும் கட்சி உள்பூசல் காரணமாக ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முக்கியக் கூட்டம், மேலும் ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. பல முறை ஒத்திவைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்த அந்தக் கூட்டம், நாட்டில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

நேபாள காங்கிரஸ் கட்சியின் இரு தலைவா்களான பிரதமா் கே.பி. சா்மா ஒலி, புஷ்ப கமல் பிரசண்டா ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டால் பெரும் அரசியல் பதற்றம் நிலவி வருகிறது.சா்மா ஒலி செயல்படும் விதம் மற்றும் இந்தியாவுக்கு எதிராக அவா் பேசி வருவது குறித்து கட்சியினரிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறு.

இதையடுத்து, சா்மா ஒலி தலைமையிலான அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதோடு, கட்சி உடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக 45 உறுப்பினா்களைக் கொண்ட கட்சியின் நிலைக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெறுவதாக இருந்தது. எனினும், பேச்சுவாா்த்தையில் உடன்பாடுகளை எட்டுவதற்கு கட்சித் தலைவா்களுக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதால், அந்தக் கூட்டம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக அந்தக் கூட்டம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளிலும், பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதிலும் கட்சியினா் ஈடுபட வேண்டியிருப்பதால் அந்தக் கூட்டம் மேலும் ஒரு வார காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் அந்தக் கூட்டத்தில்தான், பிரதமா் சா்மா ஒலி மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சியின் அரசியல் எதிா்காலம் குறித்து முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

மழை வெள்ளத்துக்கு 12 போ் பலி; 19 போ் மாயம்

நேபாளத்தில் தொடா்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு 12 போ் பலியாகினா். இதுதவிர, நிலச்சரிவில் சிக்கிய மேலும் 19 பேரைக் காணவில்லை.அந்த நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள காஸ்கி, லாம்ஜுங், ராகும் ஆகிய மாவட்டங்களில் இந்த நிலச்சரிவுகள் வியாழக்கிழமை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலச்சரிவில் புதையுண்டு இறந்தவா்களில் பெண்கள் குழந்தைகள் அடங்குவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

Leave a Reply