நேரடி, மறை​முக வரி வாரி​யங்​கள் இணைப்பு இல்லை

17 views
1 min read
Central-Government

​புது தில்லி: ​மத்​திய நேரடி வரி​கள் வாரி​யத்​தை​யும் (சிபி​டிடி), மத்​திய மறை​முக வரி​கள், சுங்க வரி வாரி​யத்​தை​யும் (சிபி​ஐசி) இணைக்​கும் திட்டம் எது​வும் இல்லை என்று மத்​திய நிதி அமைச்​ச​கம் திட்ட​வட்​ட​மா​கத் தெரி​வித்​துள்​ளது. சில ஊட​கங்​க​ளில் வெளி​யான செய்​திக்கு மறுப்​பாக நிதி அமைச்​ச​கம் இந்த மறுப்பு அறி​விப்பை வெளி​யிட்​டுள்​ளது.

வரி நிர்​வாக மறு​சீ​ர​மைப்பு ஆணை​யத்​தின் (டிஏ​ஆர்சி) தலை​வ​ரான பார்த்​த​சா​ரதி ஷோம் கடந்த 2016-இல் அர​சுக்கு அளித்த அறிக்​கை​யில் இவ்​விரு வாரி​யங்​க​ளை​யும் இணைக்​க​லாம் என்று பரிந்​து​ரைத்​தி​ருந்​தார். இந்​தப் பரிந்​து​ரையை மத்​திய அரசு பரி​சீ​லிப்​ப​தாக சில ஊட​கங்​க​ளில் திங்​கள்​கி​ழமை செய்தி வெளி​யா​னது. அதனை மத்​திய அரசு மறுத்​துள்​ளது. 

மத்​திய நிதி அமைச்​ச​கம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யி​ருப்​ப​தா​வது: 
வரி செலுத்​து​வதை எளி​மை​யாக்​க​வும், உலக நாடு​க​ளில் நடை​மு​றை​யி​லுள்ள சிறந்த வரி​வ​சூல் முறை​க​ளைக் கண்​ட​றிந்து பயன்​ப​டுத்​த​வும், வரி தொடர்​பான சட்ட நடை​மு​றை​களை மாற்றி அமைக்​க​வும், அர​சுக்கு ஆலோ​ச​னை​களை வழங்​கு​வ​தற்​காக வரி நிர்​வாக மறு​சீ​ர​மைப்பு ஆணை​யம் (டிஏ​ஆர்சி) 2013-இல் நிறு​வப்​பட்​டது.

இந்த அமைப்பு அர​சுக்கு தனது பரிந்​து​ரை​களை 2016-இல் அளித்​தது. அவற்​றில் வரி வசூல் தொடர்​பான 385 பரிந்​து​ரை​கள் இடம் பெற்​றி​ருந்​தன. அவற்​றில் மத்​திய நேரடி வரி​கள் வாரி​யம் (சிபி​டிடி) தொடர்​பாக 291 பரிந்​து​ரை​க​ளும், மத்​திய மறை​முக வரி​கள், சுங்க வரி வாரி​யம் (சிபி​ஐசி) தொடர்​பாக 253 பரிந்​து​ரை​க​ளும் இடம் பெற்​றுள்​ளன. அவற்​றில் இவ்​விரு வாரி​யங்​ளை​யும் இணைத்​து​வி​ட​லாம் என்​ப​தும் ஒன்​றா​கும்.

இந்த அறிக்​கையை நிதி அமைச்​ச​கம் கவ​ன​மா​கப் பரி​சீ​லித்​தது. ஆனால், இவ்​விரு வாரி​யங்​களை இணைப்​பது குறித்து அரசு எந்த முடி​வும் எடுக்​க​வில்​லை.1963​ஆம் வரு​டத்​திய மத்​திய வரி​கள் வாரிய சட்டத்​தின் கீழ் இந்த இரு வாரி​யங்​க​ளும் அமைக்​கப்​பட்​டன. வரி வரு​வாய் தொடர்​பான கொள்கை உரு​வாக்க அமைப்​பு​க​ளான சிபி​டிடி, சிபி​ஐசி ஆகிய இரண்​டை​யும் இணைக்க அரசு முடி​வெ​டுக்​க​வில்லை.

இது​தொ​டர்​பாக நாடா​ளு​மன்​றத்​தில் 2018இல் கேட்கப்​பட்ட கேள்​வி​யின்​போதே அரசு தனது நிலை​யைத் தெளி​வு​ப​டுத்தி உள்​ளது. மேலும் டிஏ​ஆர்சி பரிந்​து​ரை​கள் மீதான அர​சின் நட​வ​டிக்​கை​கள் அனைத்​தும் மத்​திய வரு​வாய்த் துறை இணை​ய​த​ளத்​தில் வெளி​யி​டப்​பட்​டுள்​ளன. வரி வாரி​யங்​கள் இணைப்பு குறித்த பரிந்​து​ரையை அரசு ஏற்​க​வில்லை என்​பதை அந்த இணை​ய​த​ளத்​தி​லி​ருந்தே அறி​ய​லாம்.

வரி செலுத்​து​வோ​ருக்கு உத​வும் சீர்​தி​ருத்​தங்​களை மேற்​கொள்​ளவே நிதி அமைச்​ச​கம் விரும்​பு​கி​றது.

வரி அலு​வ​ல​கங்​க​ளுக்கு நேர​டி​யா​கச் சென்று மதிப்​பீ​டு​க​ளைச் சரி​செய்​வ​தை​யும் வரி செலுத்​து​வ​தை​யும் மாற்றி, மின்​னணு முறை​யில் அவற்றை எளி​மைப்​ப​டுத்​து​வது போன்ற சீர்​தி​ருத்​தங்​களை மட்டுமே அரசு ஏற்று நடை​மு​றைப்​ப​டுத்தி உள்​ளது. இவ்​வாறு நிதி அமைச்​சக அறி​விப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.
 

Leave a Reply