பணியாளருக்கு கரோனா தொற்று: தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடல்

12 views
1 min read
coronavirus

கோப்புப்படம்

தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வெள்ளிக்கிழமை, அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக பணியாற்றும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

TAGS
coronavirus

Leave a Reply