பண்ணைக்குட்டை அமைத்த சீர்காழி ரோட்டரி சங்கத்தினர்

14 views
1 min read
sirkazhi

சீர்காழி ரோட்டரி சங்கத்தின் சார்பாக பண்ணைகுட்டை அமைத்தல் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணியை ரோட்டரி மாவட்ட ஆளுநர் பாலாஜிபாபு தொடங்கி வைக்கிறார்.

 

சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் சீர்காழி ரோட்டரி சங்கத்தின் சார்பாக பண்ணைக்குட்டை அமைத்தல் மற்றும் மரம் நடும் விழா நடைபெற்றது. 

ரோட்டரி சங்க தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் பழனியப்பன் வரவேற்றார். ரோட்டரி சங்க முன்னாள் மாவட்ட துணை ஆளுநர் சாமிசெழியன், மாவட்ட துணை ஆளுநர் இளங்கோவன், மாவட்ட தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர்.

ரோட்டரி மாவட்ட ஆளுநர் பாலாஜிபாபு பண்ணைகுட்டை அமைக்கும் பணியையும் , மரக்கன்றுகள் நட்டு விழாவைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.  இதில் முன்னாள் தலைவர்கள் பாஸ்கரன், பிரசாந்த்குமார், சுசீந்திரன், சண்முகசுந்தரம். சிவகுரு, சுப்பிரமணியன் உறுப்பினர்கள் ரமேஷ், பொருளாளர் அய்யுப்அன்சாரி, விநாயகமூர்த்தி, மணிகண்டன், சரவணன் சேகர், பாபுநேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் சண்முகம் நன்றி கூறினார். 

படவிளக்கம்: சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் சீர்காழி ரோட்டரி சங்கத்தின் சார்பாக பண்ணைகுட்டை அமைத்தல் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணியை ரோட்டரி மாவட்ட ஆளுநர் பாலாஜிபாபு தொடங்கி வைக்கிறார்.

TAGS
rotary club

Leave a Reply