பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு: பயிற்சி மருத்துவர் கைது

17 views
1 min read
arrest

பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பயிற்சி மருத்துவர்

 

சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறையில், பத்தாம் வகுப்பு மாணவியான 15 வயது சிறுமிக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, பயிற்சி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதி கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் 15 வயது மகள், பத்தாம் வகுப்பு  தேர்ச்சி பெற்ற நிலையில், பதினோராம் வகுப்பில் சேர்ந்து படிப்பதற்கு, பள்ளி திறப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

இதற்கிடையே, இவரது வீட்டிற்கு அருகே இயங்கி வரும் தனியார் மருத்துவமனை ஒன்றில்,  கடந்த இரு மாதங்களாக பயிற்சி மருத்துவராக பணிபுரிந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த துரூர் கிராமத்தைச் சேர்ந்த, மருத்துவர் மதியழகன் வயது (25) என்பவருடன், பழகி உள்ளார்.

இந்நிலையில், திருமண ஆசைகாட்டி தன்னை பயிற்சி மருத்துவர் பாலியல் தொந்தரவு செய்து விட்டதாக,  இச்சிறுமி கருமந்துறை போலீசில் செவ்வாய்க்கிழமை புகார் செய்தார்.  இவரது புகாரின்பேரில் கருமந்துறை காவல் ஆய்வாளர் மோகன்ராஜ் உதவி ஆய்வாளர் வீரமுத்து ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த பயிற்சி மருத்துவர் மதியழகனை  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஆத்தூர் சிறையில் அடைத்தனர்.

சிறுமியை, மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TAGS
Sexual harassment

Leave a Reply