பழிவாங்கும் நடவடிக்கைக்கு 6 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை: பாஜக பதிலடி

19 views
1 min read
muralithara-rav

ராஜீவ் காந்தி அறக்கட்டளை உள்ளிட்டவை மீதான நிதி முறைகேடு குற்றச்சாட்டு தொடா்பான விசாரணை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றால் அதற்காக 6 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று பாஜக தெரிவித்துள்ளது.

அறக்கட்டளைகள் குறித்த விசாரணையை துரிதப்படுத்த மத்திய அரசு குழு அமைத்துள்ளது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் கூறியிருந்த நிலையில், அதற்கு பதிலடி தரும் வகையில் பாஜக இவ்வாறு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக பாஜக தேசிய செயலாளா் பி. முரளிதா் ராவ் தில்லியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

எந்தவொரு விவகாரத்திலும் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது. அறக்கட்டளைகள் நிதி பெற்றது தொடா்பான பல்வேறு தகவல்கள் தற்போதுதான் பொதுவெளியில் வெளிப்பட்டுள்ளன. அவை குறித்து விசாரணை நடத்துவது வழக்கமான நிகழ்வுதான். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இருந்தால், கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சியமைத்தபோதே இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடந்திருக்கும். மத்திய அரசு 6 ஆண்டுகள் காத்திருந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அறக்கட்டளைகள் குறித்த விசாரணைக்கு காங்கிரஸ் தலைவா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் முரளிதா் ராவ்.

Leave a Reply