பழைய தலைமைச் செயலகக் கட்டடத்தை இடிக்க தெலங்கானா உயர் நீதிமன்றம் தடை

21 views
1 min read
Telangana court bans demolition of old headquarters building

பழைய தலைமைச் செயலகக் கட்டடத்தை இடிக்க தெலங்கானா நீதிமன்றம் தடை

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள பழைய தலைமைச் செயலகக் கட்டடத்தை இடிக்க ஜூலை 13ம் தேதி வரை இடிக்கக் கூடாது என்று தெலங்கானா உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பழைய தலைமைச் செயலகக் கட்டடத்தை இடிக்க தெலங்கான அரசு முடிவு செய்து அதற்கான பணிகளையும் தொடங்கிவிட்டது.

முதலில் இதற்கு அனுமதி அளித்த தெலங்கான உயர் நீதிமன்றத்தில், அரசின் ஊரடங்கு விதிமுறையை மீறி கட்டடம் இடிக்கப்படுவதைத் தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவை விசாரித்து, ஜூலை 13 வரை தலைமைச் செயலகக் கட்டடத்தை இடிக்கத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.
 

TAGS
court news

Leave a Reply