பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 2.40 லட்சத்தைத் தாண்டியது!

26 views
1 min read
Pakistan reports 3,359 corona cases in last 24 hours

கோப்புப்படம்

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,359 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. 

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானோர் குறித்த விவரங்களை அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. 

அதன்படி,  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,359 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,40,848 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 61 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்பு 4,983 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று இதுவரை 1,45,311 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் 2,193 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இதில் 435 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மொத்த பாதிப்பில் சிந்து – 99,362, பஞ்சாப் – 84,587, கைபர்-பக்துன்க்வா- 29,052, இஸ்லாமாபாத் – 13,731, பலுசிஸ்தான்- 11,052, கில்கித்-பல்திஸ்தான்- 1,605 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 1,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 24,333 மாதிரிகள் உள்பட இதுவரை 14,91,437 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

TAGS
coronavirus

Leave a Reply