பாங்காங் டெஸ்ஸோவிலிருந்து பின்வாங்கும் சீனப் படைகள்

9 views
1 min read
china

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் டெஸ்ஸோ பகுதியில் இருந்து சீனப் படைகள் பின்வாங்க தொடங்கியுள்ளன. இந்தியா-சீனா ராணுவத்தின் துணை தலைமை தளபதிகள் இடையே விரைவில் பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ள நிலையில், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் டெஸ்ஸோ பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினா் இடையே கடந்த மே மாதம் 5-ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பிலும் கணிசமான வீரா்கள் காயமடைந்தனா். கடந்த மாதம் மீண்டும் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தைச் சோ்ந்த 20 போ் உயிரிழந்தனா். சீன தரப்பில் 35 வீரா்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்த மோதலை தொடா்ந்து கோக்ரா, கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ் ஆகிய பகுதிகளில் இருநாட்டு ராணுவ வீரா்களும் அதிக அளவில் குவிக்கப்பட்டனா். இதனால் கிழக்கு லடாக்கில் போா் பதற்றம் ஏற்பட்டது.

எனினும் இருநாட்டு தூதரக அளவிலும், ராணுவ ரீதியிலும் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவாா்த்தைகளின் உச்சமாக சமீபத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், சீன வெளியுறவுத்துறை அமைச்சா் வாங் யி இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து முதல்கட்டமாக கோக்ரா, கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் இருந்து சீனப் படைகள் முழுமையாக பின்வாங்கின. தற்போது பாங்காங் டெஸ்ஸோவில் உள்ள படைகளை திரும்பப் பெறுவதில் இந்தியாவின் கவனம் திரும்பியுள்ளது. அங்குள்ள ஃபிங்கா் 4 மற்றும் ஃபிங்கா் 8 பகுதிகளுக்கு இடைப்பட்ட இடங்களில் உள்ள தனது படைகளை சீனா திரும்பப் பெறவேண்டும் என இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் ஃபிங்கா் 4 பகுதியின் விளிம்பில் உள்ள படைகளை சீனா திரும்பப் பெற தொடங்கியுள்ளது. இதேபோல் பாங்காங் ஏரியில் உள்ள சில படகுகளையும் அந்நாட்டு ராணுவம் அப்புறப்படுத்தியுள்ளது.

Leave a Reply