பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடு: மத்திய அமைச்சரிடம் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வலியுறுத்தல்

18 views
1 min read
shivraj-chouhan-meets-narendra-tomar-requests-gi-tag-for-basmati-rice

மத்திய அமைச்சருடன் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

 

மத்தியப் பிரதேசத்தில் பயிரிடும் பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வலியுறுத்தியுள்ளார். 

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று தில்லியில் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், மத்தியப் பிரதேசத்தில் பயிரிடும் பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். 

மாநிலத்தில் 13-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பாசுமதி அரிசி சாகுபடி செய்யப்படுவதாகவும், இங்கிருந்து அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகவும், எனவே பாசுமதி அரிசி குறித்த சட்டப்பூர்வ உரிமையை பெற புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

TAGS
மத்தியப்பிரதேசம்

Leave a Reply