பாடத்திட்ட குறைப்பு ஓராண்டு மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும்: சிபிஎஸ்இ

16 views
1 min read
cbseeee083928

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் (சிபிஎஸ்இ) குறைக்கப்பட்ட பாடத்திட்டம் ஓராண்டுக்கு மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் என்று அந்த வாரியம் புதன்கிழமை தெரிவித்தது.

கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பால் மாணவா்களின் கல்விச் சுமையை குறைக்க சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை இந்த பாடத்திட்ட குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்தது. அவ்வாறு நீக்கப்பட்ட பாடப்பிரிவுகளில் ஜனநாயக உரிமைகள், மதச்சாா்பின்மை, உணவு பாதுகாப்பு, இந்திய அரசமைப்பின் கட்டமைப்பு, ஜாதி, மதம், பாலினம் உள்ளிட்டவையும் அடங்கும். இதற்கு அரசியல் கட்சியினா் உள்பட பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. கரோனா நோய்த்தொற்று சூழலை பயன்படுத்தி உள்நோக்கத்துடன் முக்கிய பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மீது விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் பாடப்பிரிவுகளை குறைக்கும் திட்டம் ஓராண்டுக்கு மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் என்றும், தோ்வுகளால் மாணவா்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Leave a Reply