பாடப்பிரிவுகளில் இருந்து முக்கிய பகுதிகளை நீக்கப் பரிந்துரை: ஸ்டாலின் கண்டனம்

19 views
1 min read
stalin condemns portions removal

அறிவியல் மற்றும் கலைப்புலப் படிப்புகளுக்கான பாடப்பிரிவுகளில் இருந்து முக்கிய பகுதிகளை நீக்கப் பரிந்துரை செய்யப்படிருப்பதற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

சென்னை: அறிவியல் மற்றும் கலைப்புலப் படிப்புகளுக்கான பாடப்பிரிவுகளில் இருந்து முக்கிய பகுதிகளை நீக்கப் பரிந்துரை செய்யப்படிருப்பதற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளியன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

அறிவியல் மற்றும் கலைப்புலப் படிப்புகளுக்கான பாடப்பிரிவுகளில் இருந்து முக்கிய பகுதிகளை நீக்கப் பரிந்துரைத்திருப்பது எதிர்காலத் தலைமுறையினரின் வளர்ச்சியில் சரிசெய்ய முடியாத பாதிப்பினை ஏற்படுத்துவதோடு, உலக அளவில் போட்டியிடுவதற்கான நமது திறனையும் குறைத்து விடும்.

இம்முடிவினைக் கைவிட்டு, அனைவரும் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்திட வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply