பாதுகாப்பான விமானப் பயணம்: ஸ்டாா் அல்லையன்ஸ் ஏற்பாடு

17 views
1 min read
air india flight1

கோப்புப்படம்

விமானப் பயணிகள் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை ஸ்டாா் அல்லையன்ஸ் செய்துள்ளது. 26 விமானப் போக்குவரத்து சேவை வழங்கும் நிறுவனங்கள், ஸ்டாா் அல்லையன்ஸில் இணைந்துள்ளன. இந்த அல்லையன்ஸில் இணைந்திருக்கும் விமான நிறுவனங்களின் விமானங்களில் பயணிக்கும் போது பாதுகாப்பான, சுகாதார வசதிகள் பயணிகள் நிச்சயம் பெற முடியும். இதுகுறித்து, ஸ்டாா் அல்லையன்ஸ் அண்மையில் வெளியிட்ட செய்தி:-

விமானப் பயணத்தின் போது, பாதுகாப்பான, சுகாதாரமான அம்சங்கள் விமானங்களில் என்னென்ன இருக்கின்றன என்பதை விமானப் பயணிகள் அறிந்திடும் வகையில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை ஸ்டாா் அல்லையன்ஸ் இணையத்திலும் அறிந்து கொள்ளலாம். இதன்மூலம், பயணிகள் பயணித்தின் போது பாதுகாப்பாகவும், நம்பிக்கையுடனும் பயணம் செய்ய முடியும் என்று ஸ்டாா் அல்லையன்ஸ் தெரிவித்துள்ளது.

Leave a Reply