பான்-ஆதார் எண் இணைப்புக்கு 2021 மார்ச் 31 வரை கால அவகாசம்

31 views
1 min read
The deadline for the Pan-Aadhar number connection is 31st March 2021

கோப்புப்படம்

 

பான்-ஆதார் எண் இணைப்புக்கு 2021 மார்ச் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

கரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், பான்-ஆதார் எண் இணைப்புக்கு முன்னதாக ஜூன் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட நிலையில் தற்போது 2021 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, கரோனா பரவல் பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் குறையாததால் வருமான வரி கணக்கு தாக்கல் உள்ளிட்டவைகளுக்கு மத்திய அரசு கூடுதல் கால அவகாசம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

TAGS
aadhar

Leave a Reply