பாலிவுட் பாணியைப் பின்பற்றும் கோலிவுட்: ஓடிடியில் வெளியாகிறதா தனுஷ் நடித்த ஜகமே தந்திரம்?

20 views
1 min read
jagamey12

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வொய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை – சந்தோஷ் நாராயணன்.

மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. ஜூலை 28 தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் தனுஷ். அந்த நாளில், ஜகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட ரகிட பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்தை ஓடிடியில் வெளியிட சில நிறுவனங்கள் தயாரிப்பாளர் வொய் நாட் ஸ்டூடியோஸின் ஷஷிகாந்தை அணுகியுள்ளன. இதுபற்றி தெரிவித்த ஷஷிகாந்த், படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. தனுஷுடன் விவாதித்த பிறகுதான் இதன் வெளியீட்டை முடிவு செய்யும் என்றார். தற்போதைய சூழலில் திரையரங்குகள் எப்போது இயங்கத் தொடங்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் தயாரிப்பாளரின் நிலையை அறிந்து ஜகமே தந்திரம் படத்தை ஓடிடியில் வெளியிட தனுஷ் சம்மதித்து விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹிந்தியில் பிரபல நடிகர்கள் நடித்த படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையில் தமிழிலும் அந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

TAGS
dhanush

Leave a Reply