பாளை.யில் தடையை மீறி அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவிக்க முயன்ற 5 பேர் கைது

13 views
1 min read
nellai

பாளையங்கோட்டையில் தடையை மீறி அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலைஅணிவிக்க முயன்றதாக வழக்குறைஞர்கள் 5 பேரை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துகோன் பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி பாளையங்கோட்டையில் உள்ள அவரின் உருவ சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மட்டும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், மற்றவர்கள் மாலை அணிவிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பாளையங்கோட்டை யாதவர் இளைஞர் அணியினர் பாளையங்கோட்டை யில் உள்ள அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். 

அப்போது, அங்கு பாதுகாப்புக்கு நின்ற பாளையங்கோட்டை காவல்துறையினர், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், அவர்கள் சிலை அருகே அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து  தடையை மீறி மாலை அணிவிக்க முயன்றதாக வழக்குரைஞர்கள் அருண் பிரவீன், சுரேஷ், செந்தில் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 

TAGS
palayamkottai

Leave a Reply