பிகாரில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

17 views
1 min read
bihar

பிகாரில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பிகார் மாநிலம், பாஷ்சிம் சம்பரன் மாவட்டம் பகாகா பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சகஸ்த்திர சீமா பால் மற்றும் சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர். 

அப்போது மாவோயிஸ்டுகளுக்கும், அதிரடிப்படை காவல்துறையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சண்டையில் 4 மாவோயிஸ்டுகள் அதிரடிப்படை காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

மேலும் அவர்களிடம் இருந்து நவீன ரக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சண்டையில், காவல்துறை தரப்பில் சகஸ்த்திர சீமா பால் இன்ஸ்பெக்டர் காயமடைந்தார்.
 

TAGS
naxals Bihar

Leave a Reply